around-world

img

நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் - சிரிக்கும் பாம்பு , நடனமிடும் குரங்கு மற்றும் பல புகைப்படங்கள் தேர்வு 

நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் 2015ஆம் ஆண்டு வனவிலங்கு புகைப்பட கலைஞர்களான பால் ஜாய்ன்சன் , ஹிக்ஸ் எம்பிஇ மற்றும் டாம் சுல்லம்  ஆகியோரால் நிறுவப்பட்டது . இவர்கள் வனவிலங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தோடு இந்த நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட போட்டியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளனர்.மேலும் , இந்த போட்டியில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 7000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பெறப்பட்டதாகவும் கூறினர்.

இந்த ஆண்டு நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுக்கான போட்டியில் 42 புகைப்படங்கள் தேர்வாகியுள்ளது . அதில் , இந்தியாவை சேர்ந்த ஆதித்ய சிரசாகர் பதிவு செய்த சிரிக்கும் பாம்பின் புகைப்படமும் தேர்வாகியுள்ளது. 

இதைத்தவிர , சண்டையிடும் பென்குவின் , தன் குட்டிக்கு நீச்சலடிக்க கற்றுக்கொடுக்கும் ஆற்று நீர்நாய் , ஒட்டகச்சிவிங்கியின் மேல் சவாரி செய்யும் குரங்கு , புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பாணியில் பச்சோந்தி, நடனமிடும் குரங்கு , கைகளை நீட்டி பாட்டு பாடும் தோரணையில் கங்காரூ உள்ளிட்ட புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

 

 

;